மார்ச் 7ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10ம் தேதி மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஒடிஸா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் 8 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மையத்தில் நடைபெறவுள்ள உதய நாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார். இதற்காக மார்ச் 7 ம் தேதியில் வருகை தரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜனவரி மாதம் 31ல் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழாவுக்கு வருகை தந்தார். பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள கோவை வந்திருந்தார். தற்போது, மத்திய தொழிற்படை பாதுகாப்பு உதய நாள் நிகழ்ச்சிக்காக மீண்டும் தமிழகம் வருகை தரவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!