உடனே முந்துங்க... 5,00,000 விமான டிக்கெட்கள் இலவசம்..!

 
hong kong tourist places

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஹாங்காங் ஏர்லைன்ஸ் அதிரடியாக 5,00,000 விமான டிக்கெட்டுகளை இலவசமாக அளிக்கப்போவதாக அறிவித்து உலக நாடுகளை சுற்றிபார்க்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது. 
 
உலகளவில் சுற்றுலா தளங்கள் நிறைந்த நாடாகா பார்க்கப்படுகிறது ஹாங்காங். தனித்தீவான இங்கு, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக, ஸ்டார் பெர்ரி படகுச் சவாரி, ஹாங்காங் ஸ்கைலைன், விக்டோரியா பீச், டியான் டான் புத்தர் சிலை, வோங் டான் சின் கோயில் உள்ளிட்ட பகுதிகள் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளாகும்.

இவற்றைக் கண்டுகளிப்பதற்காக உலகம் முழுவதிலிமிருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பர். இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஹாங்காங் தீவும் பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கும், விமானங்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அந்த நாட்டின் முக்கிய வருவாயாக பார்க்கப்படுவது சுற்றுலா தான். 

hong kong

இந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வண்ணம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. ஆம், அதன்படி, ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனம், 5,00,000 விமான டிக்கெட்களை இலவசமாக வழங்கவுள்ளது.

இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதமே செய்தி வெளியான நிலையில், தலைமை நிர்வாகியான ஜான் லீ, அதற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 5 லட்சம் இலவச விமான டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது, எனத் தெரிவித்தார்.

hong kong

இதற்கான ஏற்பாடுகள் ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் தேர்வு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web