ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு!

 
hong kong
 

ஆசியாவில் உள்ள ஹாங்காங் தாய் பொ நகரில் அமைந்த வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் எனும் 35 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கொடிய தீ விபத்து உயிர்க்கொய்தலாக மாறியுள்ளது. 1,984 வீடுகள் கொண்ட இந்த உயர்மாடியில் சுமார் 5,000 பேர் வசித்துவர, அருகிலும் பல குடியிருப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த சூழலில், கடந்த 27ஆம் தேதி மாலை 3 மணியளவில் திடீரென தீப் பரவல் தொடங்கியது. நிமிடங்களிலேயே பல தளங்களுக்கு அலகு மாறிய தீ, மர கட்டமைப்புகள் வழியாக வேகமாக அடுத்த குடியிருப்புகளுக்கும் பரவியது.

முதல் நிலையில் 128 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் தேடுதல் பணிகளின்போது பலி எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 79 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீக்குள்ளான கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்த நிலையில் இருப்பதால், மீட்புப் பணிகள் பெரும் சவாலாகவே நீள்கின்றன.

இந்நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாக உள்ளனர் என தெரிவிக்கப்படுவது அச்சத்தை அதிகரிக்கிறது. தீயணைப்பு, பேரிடர் மேலாண்மை படைகள் இணைந்து விழிப்புடன் தேடுதல் பணிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் வேலையில் இந்த விபத்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!