தமிழக தம்பதிகளுக்கு கெளரவம்... ஆஸ்கர் விருதை வென்றது ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்'!

 
தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்

நீலகிரியைச் சேர்ந்த தம்பதியரைப் பற்றி இயக்கியுள்ள ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படத்துக்கு சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அதைப் போலவே வரலாற்று சாதனையாக முதல் முறையாக இந்திய படமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பாடலான நாட்டு நாட்டு.. பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த மூலப்பாடல் என்ற பிரிவில் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதை இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு, 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.

இதில், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) பெற்று அசத்தியுள்ளது. 

ஆஸ்கர் விருது

கார்த்திக் கொன்சல்வேஸ் இயக்கியுள்ள நீலகிரி தம்பதியை பற்றிய The elephant whisperers ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்த இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ படத்திற்காக இயக்குனர்கள் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் குனெட் மொன்கோ வென்றனர். 

தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் குழுவினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இதேபோல், மேலும் பல பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை பார்க்கலாம்..

சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது

சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப் படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.

சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை பெற்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web