ஆணவக் கொலையா?! இஸ்லாமிய இளைஞரும், இந்து பெண்ணும் திருமணக் கோலத்தில் சடலமாக மீட்பு!
ஜான்சி மாவட்டத்தின் பட்டி கும்ஹாரா கிராமத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டி கும்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த யாசூல் (20) என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த முஸ்கான் (18) என்ற இளம்பெண்ணும் கைவிடப்பட்ட ஒரு வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட முஸ்கான், புதுப்பெண் அணிவதைப் போன்ற திருமண உடையில் இருந்துள்ளார். இது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாசூல் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர், முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது 'கௌரவக் கொலை'யாக இருக்குமோ என்ற கோணத்திலும் பேச்சுக்கள் எழுகின்றன.
உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருமே, அவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் என்பதை முற்றிலும் மறுத்துள்ளனர். தங்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்டமாக இது தற்கொலை எனத் தோன்றினாலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
