'கௌரவக் கொலை'யா? மருத்துவ மாணவி வர்ஷினி மரணத்தில் நிகழ்ந்தது என்ன? முழு விபரம்!

 
வர்ஷினி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி (22), சேலம் நாயக்கன்பட்டியில் தங்கி ஹோமியோபதி மருத்துவ இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று அவர் மர்மமான முறையில் தனது அறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

22 வயதான வர்ஷினி, நெல்லையைச் சேர்ந்த 40 வயது சித்தா மருத்துவர் (2 குழந்தைகளின் தந்தை) ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை வரதராஜன் கடுமையாக எதிர்த்துள்ளார். வர்ஷினி அறையில் சடலமாகக் கிடக்க, கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது. வர்ஷினி இறந்து கிடப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவரது தந்தை வரதராஜன் அந்த அறைக்கு வந்து சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.

வர்ஷினி

"மகளைத் தாக்கிவிட்டேன்" என்று வரதராஜன் தனது மனைவியிடம் போனில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

வர்ஷினியின் உடலில் வெளிப்புறக் காயங்கள் இல்லை, ஆனால் கை நீல நிறமாக மாறியிருந்தது. இதனால் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா அல்லது தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மாணவியின் தந்தை வரதராஜன் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் நெல்லை வீட்டிற்கும் செல்லவில்லை. அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர்.

வர்ஷினியின் உடல் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவிலேயே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!