பயிற்சியில் பரிதாபம்... ஹூப் இடிந்து விழுந்து 16 வயது கூடைப்பந்து வீரர் பலி !

 
கூடைப்பந்து
 

ஹரியானா, ரோஹ்தக் அருகே உள்ள லகான் மஜ்ரா கிராமத்தில் நேற்று காலை நடந்த பயங்கர விபத்தில் தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற 16 வயது கூடைப்பந்து நட்சத்திரம் ஹார்திக் ரதி உயிரிழந்தார். தனிப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது கூடைப்பந்து ஹூப்பின் இரும்புக் கம்பம் உடைந்து சரிந்து விழுந்ததில் அவர் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஹார்திக் ஒரு முயற்சியில் வெற்றிகரமாக டங்க் அடித்த பிறகு, மறுபடியும் பாய்ந்த போது கம்பமே முன்நோக்கி சாய்ந்து வீழ்ந்தது. வளையம் நேரடியாக அவரது மார்பில் மோதியதில் கடும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த வீரர்கள் உடனே உதவிச்செய்ய முயன்றும், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
 
ஹார்திக் காங்க்ராவில் நடந்த 47வது சப்-ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப், ஹைதராபாத் 49வது சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் புதுச்சேரி 39வது யூத் நேஷனல்ஸ் ஆகியவற்றில் பல பதக்கங்கள் வென்றுள்ளார். சமீபத்தில் தேசிய பயிற்சி முகாமிலிருந்து திரும்பியிருந்த அவர், அடுத்த கட்டத்தில் இந்திய அணியில் வாய்ப்பு பெறக்கூடியவராக கருதப்பட்டார். மகனின் எதிர்காலத்தை நோக்கி கனவுகளுடன் இருந்த குடும்பத்தினர் தற்போது துயரத்தில் முடங்கியுள்ளனர்.


 
விபத்து குறித்து தகவல் அறிந்த ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, "விபத்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்" என தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து அமைச்சர் கிருஷ்ணன் லால் பன்வார், இந்தச் சம்பவத்தை “அதிர்ச்சி தரும் துயரம்” என வர்ணித்து, மாநிலம் முழுவதும் விளையாட்டு மைதானங்களின் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள அறிவிப்பதாக கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். உபகரண பராமரிப்பில் பிழை காரணமாக இளைஞர் உயிரிழந்தாரா என்பதற்கான விசாரணையும் நடைபெறுகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதே மாநிலத்தின் பகதூர்கரில் இரண்டு நாட்களுக்கு முன்பும் 15 வயது அமன் என்ற சிறுவன் கூடைப்பந்து வளையம் விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டு இளம் வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, ஹரியானா விளையாட்டு தளங்களின் பாதுகாப்பு மீதான கேள்விகள் தீவிரமடைந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!