ஈரானை அதிரவைத்த அமெரிக்காவின் ராட்சதக் குண்டுகள்: ஹோர்முஸ் நீரிணையில் 2,200 கிலோ வெடிபொருட்கள் வீச்சு!
ஈரான் நாட்டின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில், உலகளாவிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்கப் படைகள் இன்று புதன்கிழமை மிகப்பயங்கரமான குண்டுமழை பொழிந்துள்ளன. சுமார் இரண்டாயிரத்து இருநூறு கிலோ எடை கொண்ட, நிலத்தடியில் உள்ள இலக்குகளையும் துளைத்துச் செல்லும் 'பங்கர் பஸ்டர்' ரகக் குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே மூண்டுள்ள போர் இரண்டு வாரங்களைக் கடந்த நிலையிலும், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளை அதிரச் செய்துள்ளது.
Hours ago, U.S. forces successfully employed multiple 5,000-pound deep penetrator munitions on hardened Iranian missile sites along Iran’s coastline near the Strait of Hormuz. The Iranian anti-ship cruise missiles in these sites posed a risk to international shipping in the… pic.twitter.com/hgCSFH0cqO
— U.S. Central Command (@CENTCOM) March 17, 2026
சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் ஏவுகணைக் கப்பல்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் ஈரானின் கடல்வழித் தாக்குதல் திறன் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அணுஆயுதக் கொள்கையைக் கைவிட மறுக்கும் ஈரானின் பிடிவாதமே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய நட்பு நாடுகள் பலவும் ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களது விருப்பமின்மையைத் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதோடு, கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த ராட்சதக் குண்டு வீச்சு ஈரான் ராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
