இந்திய கப்பல்களுக்கு அனுமதி... ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் அறிவிப்பு!

 
ஹோர்முஸ் ஹோர்முஸ்

 

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றத்தைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி அறிவித்துள்ளார்.

முன்னதாக துபாயில் இருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்த தாய்லாந்து கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியது. தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகளின் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளானதால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

இதற்கிடையில் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் இந்தியக் கொடியுடன் சென்ற “புஷ்பக்”, “பரிமல்” ஆகிய சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க ஈரான் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனுமதி தொடர்ந்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!