மார்கழி மாத ராசிபலன்.. இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்... வாய்ப்புகளை பயன்படுத்திக்கோங்க!

 
இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்!!

இன்று மார்கழி மாதம் துவங்குகிறது. இந்த மார்கழி மாதத்தில் இறை சிந்தனையுடன் பிரார்த்தனை செய்யுங்க. இந்த ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தருகிறது. தவறாமல் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க. மார்கழி மாதம் (டிசம்பர் 16, 2025 முதல் ஜனவரி 14, 2026 வரை) பக்திப் பெருக்கின் புனித மாதமாக இருந்தாலும், கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. குறிப்பாக, மார்கழி 6-ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு வக்ர இயக்கத்தில் மாறுகிறார். இதனால் பல ராசிகளுக்குக் கல்யாணக் கனவுகள் நனவாகும் யோகம் பிறக்கிறது. இந்தப் புனித மாதத்தில் உங்கள் ராசிக்குக் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன என்பதை அழகாக, எளிய நடையில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே... இந்த மாதம் உங்களுக்கு இனிய மாதமாகவே அமையும். மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால், நீண்ட நாட்களாக இருந்த பொருளாதார நெருக்கடி முழுவதுமாக நீங்கும். புதிய முயற்சிகளை எடுப்பதற்கான வழிகள் பிறக்கும்; அதில் வெற்றியும் காண்பீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் நல்லபடியாக நடந்து வருமானம் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி, விரைவில் கல்யாணக் கனவுகள் நனவாக வாய்ப்புள்ளது. பூர்வீகச் சொத்துகள் தொடர்பான சிக்கல்கள் சாதகமாக முடிந்து, மகிழ்ச்சியான மாதமாக இது அமையும்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே! மார்கழி மாதத்தில் உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து, செயல்பாடுகளில் வேகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வெற்றியைத் தேடித் தரும். பொருளாதார நிலை சீராக இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்; கணவன்-மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து, அன்யோன்யம் கூடும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, மீண்டும் உறவு மேம்படும்.

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் பல காலமாகத் தடைப்பட்டிருந்த காரியங்கள் தானாகவே படிப்படியாக நிறைவேறத் தொடங்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசியைப் பலப்படுத்துவதால், கல்யாண வரன்கள் தேடி வரும். பேசிப் பாதியில் நின்ற திருமணங்கள் மீண்டும் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. தந்தை வழியில் இருந்தப் பிரச்சனைகள் அகன்று சுமுகமான நிலை உருவாகும். பாகப்பிரிவினைகள் வெற்றிகரமாக முடிந்து சொத்துக்கள் சேரும். பொருளாதார நிலை உயர, வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும்.

கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இந்த மார்கழி மாதம் எதிர்பாராத நன்மைகளை அள்ளித் தரும் பொற்காலமாக அமையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் அளவிற்குச் சிறப்பான நேரமிது. குடும்பப் பிரச்சினைகள் அத்தனையும் மறைந்து, வீட்டில் குதூகலம் நிறைந்திருக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்; எதிர்பார்த்த பதவி உயர்வுக்கு வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்குப் புதிய முதலீடுகள் இலாபத்தைத் தேடித் தரும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து மன நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ராசி

சிம்மம் 
சிம்ம ராசி வாசகர்களே! லாப ஸ்தானத்தில் (11-ஆம் இடத்தில்) குருவின் சஞ்சாரம் இருப்பதால், இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான மாதம். இந்தச் சஞ்சாரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பொன்னான வாய்ப்பாகும். போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் என்று கவலைப்படாமல், உங்கள் இலக்கை நோக்கிச் சென்றால் வெற்றி நிச்சயம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் குவியும். சகோதரர்களின் பகை நீங்கி, பாசம் கூடும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றியும், பாராட்டும் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் வந்துசேரும்.

கன்னி
கன்னி ராசி அன்பர்களே! இந்த மார்கழி மாதம் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலமாக அமையப் போகிறது. புதனும் சுக்ரனும் இணையும் யோகத்தால், ஐந்து விதமான நன்மைகள் உறுதி. நிதி நிலைமை உச்சம் பெறும். வராத கடன்கள் வசூலாகும். வேலைவாய்ப்பில் இருந்த மந்த நிலை விலகிப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு பலப்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. முதலீடுகள் செய்வதற்குச் சாதகமான நேரமிது.

துலாம்
துலாம் ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானத்திற்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், விரயாதிபதி புதனும் இணைந்திருப்பதால், எவ்வளவு வருமானம் வந்தாலும் அதைவிடச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, இந்த மாதம் செலவு செய்வதில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் பேசுவதற்குச் சாதகமான நேரம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்-மனைவி உறவு அன்யோன்யமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே! மார்கழி மாதம் முழுவதும் உங்களுக்குச் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் பேச்சில் ஒருவிதத் தன்னம்பிக்கை வெளிப்படும். இது தொழில் மற்றும் சமூகத்தில் உங்களின் மதிப்பு உயர உதவும். எடுத்த முயற்சிகளில் வெற்றி நிச்சயம். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி, அமைதி பிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்த சிறு சிறு தொல்லைகள் மறைந்து, புத்துணர்ச்சி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

தனுசு
தனுசு ராசி அன்பர்களே! மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் இருப்பதால் மனக்குழப்பங்கள் சற்று அதிகரிக்கலாம், விரயங்களும் கூடும். ஆனால், மார்கழி 6-ஆம் தேதிக்குப் பிறகு குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் இடர்ப்பாடுகள் முழுவதுமாக அகலும். அதன்பிறகு எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி நிச்சயம். இழப்புகளை ஈடுசெய்யும் முயற்சிகள் வெற்றி தரும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதோடு, உதிரி வருமானமும் உண்டு. திருமண முயற்சிகள் கைகூடும். எனினும், செவ்வாய் மாத இறுதியில் உச்சம் பெறுவதால், விரயங்கள் அதிகரிக்கலாம்; புதிய சொத்துக்கள் வாங்குவோர் வில்லங்கங்களைப் பார்த்து வாங்குவது நல்லது.

மகரம்
மகர ராசி நேயர்களே! இந்த மாதம் தொழில் வளர்ச்சியில் திருப்தியான நிலையைக் காண்பீர்கள். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். கலைஞர்களுக்குக் கவுரவமும், அந்தஸ்தும் உயரும். மாணவ-மாணவிகளுக்குக் கல்வியில் மேன்மை உண்டு. எனினும், மாத இறுதியில் விரயாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். வீடு மாற்றம், இடமாற்றம் வர வாய்ப்புள்ளது. சேமிப்பு கரையும் நேரம் இது என்பதால், நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உத்தியோக ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல நிலை காணப்படும். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உங்கள் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, மகிழ்ச்சி பொங்கும். எதிர்பாராத தன வரவுக்கு வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் இந்த மாதம் நிறைவேறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற சிக்கல்களில் இருந்து விலகலாம்.

மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இந்த மார்கழி மாதம் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் மாதமாக அமையும். தர்ம சிந்தனைகளும், நல்ல காரியங்களில் ஈடுபடும் எண்ணமும் மேலோங்கும். தொழில் ரீதியாக இருந்த எதிர்ப்புகள் விலகும். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற காலம் இது. உத்தியோகத்தில் சற்று அலைச்சல்கள் இருந்தாலும், அதற்கானப் பலன் கட்டாயம் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்பட்டால், வெற்றிகள் உறுதி.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!