கோர விபத்து !! அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதிய பைக்!! 6பேர் பலி!!

 
விபத்து

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எந்த இடத்திற்கும் உடனடியாக போய்ச்சேர வேண்டும் என்ற வேகம், எப்போதும் கையில் மொபைலை வைத்துக் கொண்டே வாகனங்களை இயக்குதல் இவைகளால் கவனக்குறைவு அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தமுடியவில்லை. அந்த வகையில் திருவண்ணாமலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாசுகி மற்றும் சாந்தி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்து

இதனைத் தொடர்ந்து இன்று காலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் உள்ள பெரியகோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, காமாட்சி, சஞ்சய், சக்திவேல், செல்வம் ஆகிய 5 நபர்களும் காரில் சென்று கொண்டிருந்த போது, பெரியகோளப்பாடி கிராமம் அருகே எதிரே வந்த சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இளையராஜா, காமாட்சி, சக்திவேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சஞ்சய் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TVMalai GH

நேற்று இரவு மற்றும் இன்று காலையில் ஏற்பட்ட இருவேறு விபத்து சம்பவங்களில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்திருப்பது திருவண்ணாமலை சுற்றுவட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web