கொடூரம்.. அரசு மருத்துவமனை வார்டில் பெண் நோயாளி பாலியல் பலாத்காரம்!

 
பெண் நோயாளி

கர்நாடகா மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதால், டவுன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அப்பெண்ணை குடும்பத்தினர் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அப்பெண் தனது வார்டு அறையில் இருந்தபோது உதவிக்கு இருந்த குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்டு ஒருவர் அப்பெண் அறைக்குள் புகுந்தார். பின்னர் அவர் நோயாளி என்றுகூட பார்க்காமல் அந்த மர்ம நபர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். 

பெண் நோயாளி

வார்டு அறையில் பெண் நோயாளி தூங்கி கொண்டிருந்தபோது நுழைந்த நபர் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் கத்தி கூச்சலிட்டார். அப்போது பக்கத்து அறையில் இருந்த இளைஞர் ஒருவர் ஓடிவந்து மர்மநபரை சுற்றிவளைத்து பிடித்தார். பின்னர் மருத்துவமனை ஊழியர்களும் சேர்ந்து அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

பெண் நோயாளி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மெகபூப் பாஷா என்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web