திருமணமான 3 மாதத்தில் கொடூரம்... மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்.. ஆசிரியை தற்கொலை!

 
தம்பதி மனைவி தற்கொலை வரதட்சனை இளம்பெண் புதுமணப்பெண் தம்பதி மனைவி தற்கொலை வரதட்சனை இளம்பெண் புதுமணப்பெண்

திருமணம் முடிந்து வெறும் மூன்றே மாதங்களில், கணவனே தனது மனைவியின் மானத்தை வைத்து மிரட்டியது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பிரியங்காவிற்கும் (30), புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர் கார்த்திகேயனுக்கும் (37) கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 10 பவுன் நகை தருவதாகப் பெண் வீட்டார் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், 5 பவுன் மட்டுமே போடப்பட்டதால், மீதமுள்ள 5 பவுன் நகையை நிலத்தை விற்றுத் தருவதாகப் பிரியங்காவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

நிலத்தை விற்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், தனது மனைவிக்குத் தெரியாமலேயே அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். "நகையைக் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை நீ வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கும், இணையதளத்திலும் அனுப்பி விடுவேன்" என மிரட்டியுள்ளார். கணவனின் மிரட்டலால் மனமுடைந்த பிரியங்கா, நேற்று முன்தினம் தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, பிரியங்காவின் உறவினர்கள் கண்டமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இது குறித்து விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணமாகி மூன்றே மாதங்கள் ஆவதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!