கொடூரம்... மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்!

 
sri priya

திருநெல்வேலி தருவையைச் சேர்ந்த பாலமுருகன் – ஸ்ரீபிரியா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவும், இருவருக்குமிடையில் மனக்கசப்பு, கலகங்கள் நீடித்து வந்தன. இதன் விளைவாக 30 வயதான ஸ்ரீ பிரியா கணவரை விட்டு பிரிந்து கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். காந்திபுரம் 2ஆம் வீதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி வந்தார்.இந்நேரத்தில், பாலமுருகனின் உறவினர் இசக்கி ராஜாவுடன் ஸ்ரீபிரியாவிற்கு பழக்கம் உருவானதாகவும், அது பின்னர் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து வெளியே செல்வதோடு, எடுத்த புகைப்படங்களும் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படங்களை இசக்கி ராஜா பாலமுருகனுக்கே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பாலமுருகன் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

ஆம்புலன்ஸ்

பின்னர் கோவைக்கு வந்த பாலமுருகன், மனைவியிடம் வீட்டிற்கு வருமாறு கேட்டபோது, ஸ்ரீ பிரியா அதனை மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோபம் கொந்தளித்த அவர், மறைத்து கொண்டுவந்த அரிவாளால் விடுதி வளாகத்திலேயே மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். ரத்தக் குளத்தில் விழுந்த ஸ்ரீப்ரியா சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுவோடு முடிவடையாமல், மனைவியை கொன்ற பிறகும் பாலமுருகன் அங்கேயே மேல் கால் கீழ் கால் போட்டு அமர்ந்து கொண்டிருந்தார். மேலும் சம்பவத்தையடுத்து “துரோகத்தின் சம்பளம் – மரணம்” என எழுதி புகைப்படத்தையும் WhatsApp ஸ்டேடஸாக வைத்ததாக கூறப்படுகிறது. இந்த செயல் உறவினர்கள், கோவை மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

போலீஸ்

தகவல் கிடைத்ததும் ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஸ்ரீபிரியாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த பாலமுருகன் கைது செய்யப்பட்டு, காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!