கொடூரம்... மது குடிக்கப் பணம் தராததால் பெற்ற தாயின் மீது தீ வைத்த மகன்!
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான மகன், மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் தனது 65 வயதுத் தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த டேபாசிஷ் நாயக் (45), தொடர்ந்து மது மற்றும் போதைப்பொருளுக்காகப் பணம் கேட்டுத் தனது தாய் ஜோத்ஸ்நரனி நாயக் (65)-கின் சேமிப்புப் பணத்தை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், இன்றும் மது குடிப்பதற்காகத் தாயிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று தாய் ஜோத்ஸ்நரனி கூறியதால் ஆத்திரமடைந்த டேபாசிஷ், தனது தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீயைப் பற்ற வைத்தார்.

உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் வலியால் அலறித் துடித்த ஜோத்ஸ்நரனியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் டேபாசிஷ் நாயக் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஜோத்ஸ்நரனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய டேபாசிஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
