கொடூரம்... போதையில் வீட்டுக்கு வந்த மனைவி... தரையில் தூக்கி அடித்து கொலை செய்த கணவன் !
ஜார்க்கண்ட் மாநில பலமூ மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட குடும்ப வாக்குவாதம் உயிர் பலியாக முடிந்துள்ளது. ராம்கார் பகுதியை சேர்ந்த உபேந்திர பர்ஹியா (25) மற்றும் அவரது மனைவி ஷில்பி தேவி (22) மூன்று ஆண்டுகளாக திருமணமாகி வாழ்ந்து வந்தனர். சம்பவம் நடந்த இரவு உபேந்திரா வீட்டில் குடிபோதையில் இருந்த நிலையில், வெளியில் இருந்த ஷில்பியும் மது அருந்தியபடி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தொடங்கிய வாய்த்தகராறு சில நிமிடங்களில் கொடூரமாக மாறியது. கோபம் தணியாமல் போன உபேந்திரா, மனைவியை தாக்கி தூக்கி தரையில் ஏறிந்துள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ஷில்பி தேவிக்கு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உபேந்திராவை கைது செய்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், கணவனின் கொடூரம் அப்பகுதியில் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
