விபரீத வீடியோ... நடுரோட்டில் வேகமாக வரும் லாரி... ரீல்ஸ் வீடியோவுக்காக டூ வீலரில் சாகசம் செய்யும் இளைஞர்கள்!

 
லாரி

கல்யாண ப்ரீ, போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட்கள் ஒரு பக்கம் ஆபாசத்தை அரங்கேற்றி வரும் நிலையில், அதை விட அதிக ஆபத்தாக ரீல்ஸ் மோகம் இன்றைய சமூகத்தில் தலைவிரித்தாடுகிறது.

உயிரைப் பணயம் வைத்து, ரயிலில் இருந்து குதிப்பது, ஓடும் ரயிலில் சாகசம் செய்வது, நெருப்பு வளையத்திற்குள் குதிப்பது, அருவியில் ஆட்டம் போடுவது என்று இவர்கள் செய்யும் அக்கப்போர்களுக்கு அளவேயில்லை.

இந்நிலையில் பீகாரில், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆசையில் இரண்டு இளைஞர்கள் செய்த ஆபத்தான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவுத்நகர் பாலத்தின் நடுவே, அதிவேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்தி வீடியோ எடுத்துள்ளனர்.


லாரி ஓட்டுநர் கடைசி நேரத்தில் சமயோசிதமாக பிரேக் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையிலும், அந்த இளைஞர்கள் அச்சமின்றி கேமராவை நோக்கி கையாட்டி வெற்றிக் குறி காட்டிய காட்சிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லைக்குகளுக்காக தங்களின் உயிரையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் தள்ளும் இத்தகைய செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீகார் காவல்துறைக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!