மிர்சாகுடாவில் பயங்கர விபத்து… 4 இளைஞர்கள் உயிரிழப்பு!
தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4 சக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித், தேவலா சூர்ய தேஜா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாகனம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
