கார் மோதி கோர விபத்து... வாலிபர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்து பெருமாள் (32). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழாவிற்காக செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலுக்கு குடும்பத்துடன் முத்துபெருமாள் சென்றார்.
இரவில் கோவிலில் இருந்து முத்துபெருமாள் மட்டும் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில்வே கேட் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று முத்துபெருமாள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த முத்துபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!