பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்... கணவருடன் வாக்குவாதம்... காரில் இருந்து இறங்கிய பெண்ணை காட்டுக்குள் இழுத்துசெல்லும் சிங்கம்!

தினமும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் வனவிலங்குகள் குறித்த வீடியோக்கள் தான் வைரலாகி வருகின்றன.
பொதுவாகவே காட்டுப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் செல்லும் பயணிகள் காட்டு விலங்குகளின் நடமாட்டங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக பயணத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Woman gets out of the car to argue with her husband while inside a Tiger Safari 😳 pic.twitter.com/46HI74qhZj
— Crazy Clips (@crazyclipsonly) April 27, 2023
இருந்தாலும் சில நேரங்களில் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதனை எடுத்துக்காட்டும் வகையில் சமீபத்தில் பெண் ஒருவரை சிங்கம் ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு காட்டுப் பகுதியில் தனது கணவருடன் காரில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனது கணவருடனான வாக்குவாதத்தில் திடீரென காரில் இருந்து வேகமாக அந்த பெண் இறங்கிவிட்டார். இதனையடுத்து பெண் தன் கணவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணின் பின்புறம் இருந்து வந்த சிங்கம் ஒன்று அந்த பெண்ணை வேகமாக காட்டுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
இது குறித்த வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் எங்கு?, எப்போது எந்த வனப்பகுதியில் நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த வீடியோ வனப்பகுதியில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!