பனியன் கம்பெனியில் பயங்கர தீவிபத்து!

 
தீவிபத்து

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர்  அய்யம்பாளையத்தில்  தனியார் பனியன் கம்பெனி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை திடீரென பனியன் நிறுவனத்தின் குடோனுக்குள் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீவிபத்து
இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தங்கவேல் என்ற நபருக்கு சொந்தமான அந்த ஆலையில் பனியன் பேப்ரிகேஷன் மற்றும் பனியன்களை பேக்கிங் செய்வது உட்பட  பல்வேறு பணிகள் அங்கு நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது.
திருப்பூரில் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்த   நிலையில், பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென மின் விநியோகம் சீர்படுத்தப்பட்டு வந்த  நிலையில், மின்கசிவால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பனியன் கம்பெனியின் காவலாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web