பதறவைக்கும் வீடியோ.. மக்கள் கண்முன்னே சாய்ந்து விழுந்து துடிதுடித்து இறந்த யானை!

 
யானை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்னா யானை, ஆண் யானை இரண்டும் சுற்றி திரிந்தது. இந்த யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்திய நிலையில், மக்னா யானையை, சின்னத்தம்பி கும்கி யானை உதவியுடன் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். 

ஒற்றை ஆண் யானை மட்டும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது. இந்த யானையை வனத்துக்குள் இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் (மார்ச் 17) இரவு இந்த யானை பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது. வனத்துறையினரும் யானையை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். 


இந்நிலையில், நேற்று (மார்ச் 18) கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகேயுள்ள வி.பள்ளிப்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் ஏற முயன்ற இந்த யானை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்பாதையில் மோதியுள்ளது. இதில், யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.

கடந்த வாரத்தில் பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நடந்த இரண்டு வார இடைவெளியில் மீண்டும் ஒரு யானை மின்சார விபத்தில் உயிரிழந்திருப்பது விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

யானை

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய ஒற்றை ஆண் யானை 17 மணி நேரம் எங்கும் நிற்காமல், யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அனைத்து தரப்பு மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. யானை மீது மின்சாரம் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 
 

From around the web