ஐதராபாத்தில் கொடூரம்... காதலனை நம்பிச் சென்ற 16 வயது மாணவி, கத்திமுனையில் மது குடிக்க வைத்து கூட்டு பலாத்காரம்!

 
பாலியல் பலாத்காரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நர்சிங்கி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், கடந்த பிப்ரவரி 16ம் தேதி பள்ளிக்குச் சென்ற நிலையில், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த கொடூர சம்பவங்கள் வெளிவந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவிக்கும், சார்மினார் பகுதியில் உள்ள காலணி கடை ஒன்றில் வேலை பார்க்கும் சிறுவனுக்கும் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை பள்ளி முடிந்து திரும்பிய அந்த மாணவி, அந்தச் சிறுவனைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அந்தச் சிறுவனின் நண்பர்கள் இருவர், மாணவியை வலுக்கட்டாயமாக ஒரு ஆட்டோவில் ஏற்றிச் செங்கிச்செர்லா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத அடுக்குமாடி குடியிருப்புக்குக் கடத்திச் சென்றுள்ளனர். அங்கு மாணவியைச் சிறைவைத்த மர்ம கும்பல், கத்திமுனையில் அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்துள்ளது. பின்னர், மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பலாத்காரம் கூட்டு பாலியல் சிறுமி பாலியல்

மாணவியின் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நர்சிங்கி போலீசார், சுமார் 36 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மாணவியை மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய இம்ரான் (24) என்ற இளைஞர் மற்றும் ஒரு சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைதான இம்ரான் என்பவர் ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு சிறுவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட மாணவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐதராபாத்தில் பட்டப்பகலில் பள்ளி மாணவி ஒருவரை மர்ம கும்பல் கடத்திச் சென்று இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!