மதுரையில் கொடூரம்... கோவில் காவல் நாயை அரிவாளால் வெட்டிக் கொன்ற வாலிபர்!

 
நாய்

மதுரை: மதுரையில் கோவில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டு வந்த நாட்டு நாயை, அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்ற வாலிபரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை வெள்ளக்கல் பகுதியில் முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாகச் செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கோவிலின் பாதுகாப்பிற்காக நான்கு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரை, இந்த நாய்களில் ஒன்று அடிக்கடி குரைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், நாயைக் கல்லால் அடிப்பது, அதற்குப் பதிலுக்கு நாய் அவரைத் துரத்துவதுமாகப் பகை நீடித்து வந்துள்ளது.

நாய்

கடந்த டிசம்பர் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில், முத்துராஜ் கையில் அரிவாளுடன் முனியாண்டி கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த நாயை வாய், கால், முதுகு என உடல் முழுவதும் மாறி மாறி கொடூரமாக வெட்டியுள்ளார். இதைப் பார்த்த பூசாரி செல்வம் தடுக்க முயன்றபோது, "உன்னையும் இப்படி வெட்டிக் கொன்றால் தான் சரியாக இருக்கும்" என முத்துராஜ் மிரட்டியுள்ளார். அரிவாளைப் பிடுங்க முயன்ற செல்வத்தின் முதுகிலும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

முத்துராஜின் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த நாய், துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தது. அதன் பிறகும் ஆத்திரம் தீராத முத்துராஜ், அடுத்த நாள் (டிசம்பர் 20) மீண்டும் பூசாரி செல்வத்தைச் சந்தித்து, "போலீசில் புகார் அளித்தால் உன்னையும் வெட்டிக் கொன்றுவிடுவேன்" என மிரட்டல் விடுத்துள்ளார்.

நாய் நாய்கள் தெருநாய்

உயிருக்கு அஞ்சாமல் பூசாரி செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துராஜைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!