ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு மீண்டும் தடை!
தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு இடம் தேர்வு, கள ஆய்வு, மத்திய அமைச்சக அனுமதி உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு வான்வெளி அனுமதி வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓசூரை சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருப்பதே காரணம் என கூறப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க இயலாது என்றும் கடிதம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓசூர் விமான நிலைய திட்டத்தில் தற்காலிக தடையுண்டாகியுள்ளது. அடுத்தகட்டமாக மாற்று வழிகள் அல்லது வேறு இடம் குறித்து என்ன முடிவு எடுக்கலாம் என்பது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
