சாப்பிட பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!

 
அரிவாள் வெட்டு

 
சென்னை பூந்தமல்லி  உணவகத்திற்கு இரவில் 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில்,   பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும், ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக தாக்குவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

அரிவாள் வெட்டு வன்முறை க்ரைம்
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 3 பேரும் ஒரே இரவில்  வெவ்வேறு இடங்களில் 3 பேரை வெட்டி பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது.  அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?