நள்ளிரவில் வீடு தீப்பிடித்து பெண் உட்பட 3 பேர் கருகி பலி!

 
mumbai
 

மராட்டிய மாநிலம் மும்பை நகரின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகரில், அதிகாலை 3 மணியளவில் வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில், மளமளவென பரவிய தீ தரைதளம் மற்றும் மாடி முழுவதும் சூழ்ந்தது.

இந்த விபத்தில் தரை தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 ஆண்களும், மாடியில் இருந்த ஒரு பெண்ணும் தீயில் சிக்கினர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வாளிகளில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றதுடன், மின் இணைப்பையும் துண்டித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை முழுமையாக அணைத்தனர்.

தீயில் சிக்கிய 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், உடல் கருகிய நிலையில் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஹர்ஷதா பவாஸ்கர் (19), குஷால் பவாஸ்கர் (12), சஞ்சோக் பவாஸ்கர் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!