இல்லத்தரசிகள் உற்சாகம்!! தங்கம் அதிரடி விலை சரிவு!!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய விலை நிலவரப்படி  சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இந்த திடீர் விலைக்குறைப்பு இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,080க்கும் விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70க்கும்,  ஒரு கிலோ  வெள்ளியின் விலை  ரூ.75,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்

தங்கத்தின் விலை கூடினாலும், குறைந்தாலும் அதற்கான மவுசு குறைவதே இல்லை. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு தான் பெரும் சேமிப்பாக பார்க்கப்படுகிறது. விற்பனையிலும் முண்ணனியில் இருந்து வருவதாக  பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு தங்கத்தின்விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது. இதனால் முதலீட்டாளர்கள் , நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கம்
நடுத்தர வர்க்கத்தினர் இல்லத்தரசிகள் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என கலக்கத்தில் ஆழ்ந்தனர். இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு ஒரு பெரும் சேமிப்பாகவே இருந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவில் தான் தங்கம் விற்பனையில் முண்ணணியில் உள்ளது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசு குறையவே இல்லை. ஏறும் போது திடீரென இரட்டை இலக்கத்தில் உயரும் தங்கம் இறங்கும் போது ஒற்றை படை இலக்கத்தில் இறங்கி வருவது தான் வாடிக்கையாக உள்ளது என இல்லத்தரசிகள் குறைபட்டு கொள்கின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web