இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!! 7 கிலோ வெங்காயம் ரூ.100!!

 
வெங்காயம் காய்கறி கடை கோயம்பேடு சந்தை


தமிழகத்திற்கு தேவையான வெங்காயத்தின் பெரும்பாலான அளவு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து  கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு எடுத்துவரப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது குளிர் மற்றும் பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கி இருப்பதால் வெங்காயம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

வெங்காயம்

இதனால் வரத்து அதிகரித்து வருவதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதனையடுத்து காஞ்சிபுரம் வீதிகளில், 7 கிலோ வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து வெங்காய வியாபாரியிடம் கேட்கப்பட்ட போது இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக  வெங்காயம் சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கி விட்டன.

வெங்காயம்

இதனால் வெங்காயம் விலை கிலோ ரூ40க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வெயில் காலம் தொடங்கி விட்டதால் கர்நாடகா மாநிலத்தில் வெங்காயம் அறுவடை சீசன் துவங்கி வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், 7 கிலோ வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் விலை வீழ்ச்சியடையும் எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web