இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!! தங்கம் அதிரடி விலை குறைப்பு!!

 
தங்கம்


பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு உச்சம் தொட்ட தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இனி குறையவே குறையாது. தங்கம் வாங்கவே முடியாதோ என நடுத்தர வர்க்கத்தினர்  பெரும்கலக்கத்தில் இருந்து வந்தனர். மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது தான் இதற்கு முழு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

தங்கம்

பட்ஜெட்டில் வெள்ளியின் மீதான  அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதுடன் தங்க நகைகள் இறக்குமதி வரியும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. பட்ஜெட்டின் தாக்கம் உடனடியாக தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கியது. இதன் காரணமாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு சவரன்  தங்கம் ரூ.44000 க்கும் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின்விலை ரூ ரூ.5,505க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

தங்கம்
இந்நிலையில், சென்னையில்  நேற்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,440க்கும்,  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின்  விலை  ரூ.520 குறைந்து ரூ. 43,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.1.40 குறைந்து ரூ.76.40க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ76400க்கும்  விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 80 குறைந்துள்ளது. அதாவது சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை  ரூ5335க்க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ42,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதனால் இல்லத்தரசிகள் சற்றே உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க