இல்லத்தரசிகள் அதிர்ச்சி!! மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! சவரனுக்கு ரூ560 உயர்வு!!

 
தங்கம்

கடந்த  ஒரு வாரமாக தங்கத்தின்  விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது . கடந்த 1 வாரத்தில் மட்டும் ரூ.3,800 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. இதனால்  நகைப் பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.  நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும்   தங்கம் விலை அதிரடியாக  உயர்ந்துள்ளது  இன்றைய விலை நிலவரப்படி சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை  கிராமுக்கு உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5540 க்கும், சவரனுக்கு ரூ.560   உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,320 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்
சென்னையில் வெள்ளியின் விலை, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.40 காசுகள்  உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.75.40க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை 1400 ரூபாய் உயர்ந்து  75,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச அளவில்  கரன்சிக்கு அடுத்தபடியாக தங்கம் தான் சொத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது. பணக்காரர்கள் முதல் பாமரர் வரை தங்கத்தில் முதலீடு செய்வதன் முக்கிய காரணம் அதனை உடனடியாக பணமாக மாற்ற முடியும் என்பது தான். இதுதவிர சர்வதேச பொருளாதார சூழலில் பதற்ற நிலை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதுவதும் தங்கம் தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 

தங்கத்தின் விலை கூடினாலும், குறைந்தாலும் அதற்கான மவுசு குறைவதே இல்லை. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு தான் பெரும் சேமிப்பாக பார்க்கப்படுகிறது. விற்பனையிலும் முண்ணனியில் இருந்து வருவதாக  பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு தங்கத்தின்விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது. இதனால் முதலீட்டாளர்கள் , நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்
நடுத்தர வர்க்கத்தினர் இல்லத்தரசிகள் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என கலக்கத்தில் ஆழ்ந்தனர். இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு ஒரு பெரும் சேமிப்பாகவே இருந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவில் தான் தங்கம் விற்பனையில் முண்ணணியில் உள்ளது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசு குறையவே இல்லை. ஏறும் போது திடீரென இரட்டை இலக்கத்தில் உயரும் தங்கம் இறங்கும் போது ஒற்றை படை இலக்கத்தில் இறங்கி வந்தது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web