இல்லத்தரசிகள் அதிர்ச்சி!! புதிய உச்சம் தொட்ட தங்கம்!! சவரன் ரூ46000க்கு விற்பனை!!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ44 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 5750க்கும், ஒரு சவரன்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ46000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ1 அதிகரித்துள்ளது.

தங்கம்

அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.82.80க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ82800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25 சதவீதமாக உயர்த்தியதே தங்கம் விலை உயர காரணம் என்று கூறப்படுகிறது.

தங்கம்

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web