வைரல் வீடியோ!! சதுர வடிவில் சைக்கிள் சக்கரம்?!

 
செர்ஜி

அனைத்துவகை வாகனங்களிலும் சக்கரங்கள் வட்ட வடிவத்தில் தான் இருக்கும். அப்படி இருந்தால் தான் வாகனங்கள் இயக்கமுடியும். மனித இனம் கண்டுபிடித்த சிறப்பான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக சக்கரம் கருதப்படுகிறது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவரும் இன்றைய காலத்தில் சைக்கிளின் சக்கரத்தை வட்ட வடிவத்திற்கு பதிலாக சதுர வடிவத்தில் வடிவமைத்து வியக்கவைத்துள்ளார். 


இதுவரை சைக்கிள் சக்கரத்தை வட்ட வடிவத்தில் பார்த்து வந்திருந்த நமக்கு சதுர வடிவத்தில் சக்கரத்தை பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது.  செர்ஜி கோர்டியேவ் எனும் பொறியாளர் தனது யூடியூப் சேனலில் சதுர வடிவ சக்கரம் கொண்ட சைக்கிளை வடிவமைத்து இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். சக்கரத்தை வடிவமைத்தது மட்டுமல்லாது அதனை இயங்கவும் வைத்திருக்கிறார்.  

செர்ஜி

இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சதுர வடிவ சக்கரம் கொண்ட வாகனம் இயங்குவது சாத்தியமில்லை என்றாலும், இதனை பொறியாளர் செர்ஜி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். செர்ஜி உருவாக்கிய சதுர சக்கரம் வட்ட வடிவ சக்கரத்தை போல சுழல்வதாக இல்லை, ஒரு சதுரமான சட்டத்தை உருவாக்கி அதனைச் சுற்றும்படி மாற்றியமைத்து இருக்கிறார்.  இந்த சதுர வடிவ சக்கரத்தின் மேல்புறத்தில் உள்ள பெல்ட் மட்டுமே சுழல்கிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web