பகீர்.. 9 கிலோ நகைகளை உருக்கியது எப்படி? தம்பதியர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

 
கீதா

சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நகைக்கடையின் ஷட்டரில் வெல்டிங் மெஷினால் துளையிட்டு உள்ளே ஒரு கும்பல் புகுந்தது. பின்னர் கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

மேலும் கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் பெங்களூரூவிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இரண்டு பேருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் தான் பெரம்பூர் நகைக்கடை கொள்ளையர்கள் என்பது அம்பலமானது.

கீதா

பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த இரண்டரை கிலோ தங்க நகையைப் பங்கு பிரிப்பதில் மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீசார், இது குறித்து தமிழக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். கர்நாடகாவில் முகாமிட்டிருந்த தமிழக போலீஸார் அங்கு விரைந்தனர். 

கைதானவர்கள் கொடுத்தத் தகவலின்படி, அவர்களது கூட்டாளிகள் கஜேந்திரன், திவாகர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் திருடிய தங்க நகைகள் குறித்து விசாரணை செய்தனர். அதில், கங்காதரன் தன்னுடைய மனைவி கீதா (26), மைத்துனர் ராகவேந்திரர் (25) ஆகியோரிடம் நகைகளைக் கொடுத்தது தெரியவந்தது.

கீதா
அவர்கள் இருவரும் திருடிய தங்க நகைகளை உருக்கிப் பணமாக்கி, அதில் ஆடம்பர கார் வாங்கி சொகுசாக வாழ்க்கை வாழ தொடங்கி விட்டனர். இதனையடுத்து இருவரையும் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்கள், 400 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். 

மேலும், இந்தக் குற்ற வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும் அருண், கவுதம் ஆகிய இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகையில் இதுவரை 5.1 கிலோ தங்கத்தை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web