பாஜக அண்ணாமலைக்கு திடீர் காய்ச்சல்! நிகழ்ச்சிகள் ரத்து! பெங்களூருவில் தங்கி சிகிச்சை?!

 
அண்ணாமலை

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக அண்ணாமலை சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் மாறி மாறி அலைந்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் தோல்வி குறித்து அண்ணாமலை சொன்ன கருத்து அக்கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியது. பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனையடுத்து இரு கட்சி தலைவர்களும் தெரிவித்த கருத்துகள் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்ததியது.

அண்ணாமலை

இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், அண்ணாமலை கர்நாடக தேர்தல் பணிகளில் பிஸியாகிவிட்டார். இதனால் சில நாட்களாக அவர் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளார். இந்த சூழலில் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் தமிழகம் திரும்பும் திட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை

மேலும், பெங்களூருவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று, அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே ஓய்வெடுத்து வருகிறார். ஏற்கனவே உள்ள திட்டத்தின்படி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை நேற்று (மார்ச் 12) பங்கேற்பதாக இருந்தது. ஆனால் காய்ச்சல் காரணமாக பங்கேற்காததால் அந்த நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஓய்வில் இருக்கும் அண்ணாமலை, ஓரிரு நாளில் சென்னை திரும்புவார் என அக்கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web