எத்தனை சீட்? எந்தெந்த தொகுதிகள்? இன்று காலை மநீம செயற்குழு கூட்டம்!
தமிழகத்தில் தேர்தல் திருவிழா நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச் சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல் தலைமையில் தொடங்குகிறது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் கட்சியின் செயல்பாடுகள், கூட்டணி நிலைப்பாடு மற்றும் பிரசாரத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் மூலம் தேர்தல் தயாரிப்புகளை மநீம கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. தொண்டர்களை ஒருங்கிணைத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகளை வேகப்படுத்தவும் இந்த செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
