”பசங்களோட சினிமாவுக்கு போய் நைசாக பேசு!” துரைமுருகன் சர்ச்சை பேச்சு!!

 
துரைமுருகன்

தமிழக அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு 1000 திட்டம் குறித்து பலவிதமான சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் திமுக அமைச்சர் துரைமுருகன் சர்ச்சையான உரை ஒன்றை வேலூரில் பேசியுள்ளார். இந்த பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி கண்டனக்குரல்களும் எழுந்து வருகின்றன.

அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தை கல்லூரி மாணவிகள் எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பதை அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அமைச்சர் துரைமுருகன் பேசும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசியது பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது.

செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் மாதம் கொடுக்க போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவன்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்.



உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால், அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்..நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம், இவ்வாறு துரைமுருகன் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

துரைமுருகன்

இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த இடத்தில் உள்ளூர் மொழிப்படி பசங்க என்பதை பெண்களைதான் குறிக்கும் அவர்களுடன் சென்று மகிழ்ச்சியாக இருங்கள் என்ற வகையில்தான் அமைச்சர் பேசினார் என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web