வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? முழு தகவல்கள்!

 
வாக்காளர் பட்டியல்
 

 

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பல்வேறு காரணங்களுக்காக சிலர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்க்க, voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு தேடல் செய்யலாம். உங்கள் பெயர் பட்டியலில் இருந்தால், நீங்கள் உங்களது பெயர் உறுதியாக பட்டியலில் இருப்பதை உறுதிசெய்யலாம்.

வாக்காளர் தேர்தல் வாக்குப்பதிவு

பெயர் இல்லையெனில், காரணங்கள் சரியா என்பதைச் சரிபார்த்து ஆட்சேபனைகளை ஜனவரி 18-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இடம் மாற்றியவர்கள் படிவம் 8, புதிய சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்ப்பதற்கும் திருத்தங்களை செய்யவும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும், அதில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!