ரேஷன் கார்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

 
ரேஷன் கார்டு

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் விவரங்களை ஆன்லைனிலேயே சரிபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தளமான www.tnpds.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தின் வலதுபுறம் இருக்கும் "பயனாளி நுழைவு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, திரையில் தோன்றும் 'Captcha' குறியீட்டை டைப் செய்யவும். இப்போது உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு 'பதிவு செய்' என்பதைக் கிளிக் செய்யவும்.

ரேஷன்

உங்கள் குடும்ப விவரங்கள் அடங்கிய பக்கம் திறக்கும். அதில் இடதுபுற மெனுவில் உள்ள "Smart Card Print" அல்லது "மின்னணு அட்டை அச்சிடுதல்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் ஸ்மார்ட் கார்டின் மாதிரித் தோற்றம் திரையில் தெரியும். அதற்குக் கீழே உள்ள "Download PDF" பொத்தானை அழுத்தினால், உங்கள் மொபைல் அல்லது கணினியில் கார்டு சேமிக்கப்படும்.

தமிழகத்தில் உங்கள் தேவையைப் பொறுத்து 5 வகையான கார்டுகள் வழங்கப்படுகின்றன. PHH: அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள். PHH-AAY: 35 கிலோ இலவச அரிசி (மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு).  NPHH: அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள். NPHH-S: சர்க்கரை மட்டுமே கிடைக்கும். NPHH-NC: எந்தப் பொருட்களும் கிடையாது, இது ஒரு அடையாளச் சான்று மட்டுமே.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!