இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு- எப்படி பதிவிறக்கம் செய்வது?!
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) மற்றும் ஆயுஷ் (AYUSH) உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 180 வினாக்கள் கேட்கப்படும்:
உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்): 360 மதிப்பெண்கள் (90 வினாக்கள்)
இயற்பியல்: 180 மதிப்பெண்கள் (45 வினாக்கள்)
வேதியியல்: 180 மதிப்பெண்கள் (45 வினாக்கள்) ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும் (Negative Marking).

பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மாணவர்கள் இந்தப் புதிய பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nmc.org.in/ என்ற முகவரியில் சென்று பார்த்துக்கொள்ளலாம். வரவிருக்கும் தேர்வில் இந்தக் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரித் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் பயின்ற மாணவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் (BVSc) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இந்தத் தேர்வு அவசியமானது.

மாணவர்களுக்கான டிப்ஸ்:
வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தை ஒருமுறை முழுமையாகப் படித்து, எதற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் பயிற்சியைத் தொடங்குவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
