TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி?

 
குரூப் 2, 2ஏ தேர்வு

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் பின்வரும் எளிய முறைகளைப் பின்பற்றி ஹால் டிக்கெட்டைப் பெறலாம்: தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய தளங்களுக்குச் செல்லவும். 'Registered User' என்ற பகுதியைத் தேர்வு செய்து, உங்கள் 'பயனர் குறியீடு' (Login ID) மற்றும் 'கடவுச்சொல்' மூலம் உள்ளே நுழையவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Download Hall Ticket' என்ற இணைப்பை கிளிக் செய்து, குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

ஹால் டிக்கெட்டில் உங்கள் புகைப்படம், கையொப்பம், தேர்வு மையம் மற்றும் தேர்வு நேரம் ஆகியவை சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். தேர்வு நாளன்று ஹால் டிக்கெட்டுடன், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அசல் அடையாளச் சான்றைக் கொண்டு செல்வது கட்டாயமாகும்.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். முதன்மைத் தேர்வானது இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் 1ல் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (தகுதி மதிப்பெண் அவசியம்). தாள் 2ல் பொது அறிவு மற்றும் பாடத் திட்டம் சார்ந்த விரிவான விடையளிக்கும் முறை (Descriptive Type).

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!