கைலாசாவிற்கு எப்படி செல்வது, நித்தியானந்தா எங்கே... உயர்நீதிமன்றம் சராமாரி கேள்வி!

 
நித்தியானந்தா


மதுரையில் 292வது ஆதீனம்  அருணகிரிநாதர் உயிருடன் இருந்த சமயத்தில்  நித்தியானந்தாவை அவருக்கு அடுத்த 293 இளைய மடாதிபதியாக நியமித்திருந்தார். அதன்பிறகு ஏற்பட்ட சர்ச்சையால் நித்தியானந்தா மடாதிபதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

நித்தியானந்தா

இந்நிலையில்  நித்தியானந்தா தான் ஒரு பக்தனாக மதுரை ஆதின மடத்திற்கு நுழைய அனுமதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.  இந்த  தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திருவண்ணாமலை நித்யானந்தா பீடத்தைச் சேர்ந்த ராஜசேகர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

நித்தியானந்தா

இன்று , மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  நித்யானந்தா எங்கு உள்ளார்?. கைலாசா நாடு எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது என கேள்வி எழுப்பினார். இதற்கு நித்யானந்தாவின் சீடர் தரப்பில், ஆஸ்திரேலியா அருகே உள்ள யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருகிறார்   இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு என நித்யானந்தாவின் சீடர் பதில் அளித்தார். மேலும், நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்கும்படி  கோரிக்கை விடுத்தனர். இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து, இந்த வழக்கை  ஒத்திவைத்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது