காற்றின் தரம் எப்படியிருக்கு?! ரூ.6.36 கோடி செலவில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள்!
உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சி இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்தப் பலகைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிஜிட்டல் பலகைகளில் காற்றில் உள்ள நுண்துகள்கள் (Dust), நச்சு வாயுக்களின் அளவு, காற்றின் வேகம், ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் மழை அளவு உள்ளிட்ட 19 வகையான தரவுகள் உடனுக்குடன் நேரலையாகக் (Real-time) காட்சிப்படுத்தப்படும்.

போக்குவரத்து சிக்னல்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 15 மண்டலங்களிலும் மொத்தம் 100 இடங்களில் இவை நிறுவப்பட உள்ளன. இந்தத் திட்டத்திற்காகச் சுமார் ரூ.6.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட நுழைவு வாயில் அருகே ஒரு டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
சென்னையில் திருவொற்றியூர், மணலி போன்ற தொழிற்சாலைப் பகுதிகள் மற்றும் தி.நகர், கோயம்பேடு, வேளச்சேரி போன்ற அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகளால் சாலைகளில் புழுதி படிந்து காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. இதனை மக்கள் நேரடியாக உணர்ந்துகொண்டு தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க இந்தத் திட்டம் உதவும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
