இந்தியாவிலேயே முதல் முறை... சிறுமிகளுக்கு இலவச HPV தடுப்பூசி!
இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாட்டில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் ரூ.14,000 மதிப்புள்ள HPV தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 3.39 லட்சம் சிறுமிகள் பயனடைய உள்ளனர். இதற்காக தமிழக அரசு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.38 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால் அங்கு சோதனை முறையில் தடுப்பூசி போடப்பட்டது. விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
