ரேவா ஆற்றுப் பாலத்தில் பெரும் விரிசல்... ஏப்ரல் 30 வரை கனரக வாகனங்களுக்குத் தடை!
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பிஹாத் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முக்கிய மேம்பாலத்தில் திடீரெனப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலம், மாவட்டத் தலைமையகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்திற்குச் செல்லும் முக்கிய வழித்தடமாக இது விளங்குவதால், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தப் பாலம் அதிரடியாக மூடப்பட்டது. இதனால் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் மைஹார், சத்னா மற்றும் சித்ரகூட் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த திடீர் மாற்றத்தால் வாகன ஓட்டிகள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பாலத்தைப் பழுது பார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்தப் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் முழுமையாகத் தடை விதித்துள்ளது. பாலத்தின் உறுதித்தன்மையை வல்லுநர்கள் ஆய்வு செய்த பின்னரே, போக்குவரத்து மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
