கனடா அரசியலில் பெரும் பரபரப்பு... பதவியேற்ற 10 நாள்களில் பாராளுமன்றத்தை கலைத்த பிரதமர்!
கனடாவில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் ராஜினாமா செய்தார். கனடா மக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்ததால் ராஜினாமா செய்ததாக பிரதமர் விளக்கம் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராகவும் லிபரல் கட்சித் தலைவராகவும் பொருளாதார நிபுணரான மாா்க் காா்னி மார்ச் 14ம் தேதி புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமராகப் பதவியேற்றுப் பத்து நாள்களே ஆகும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "டிரம்ப் நம்மை உடைக்க விரும்புகிறார். அது நடக்க நாங்கள் விடமாட்டோம். டிரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள 343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 28 ம் தேதி நடைபெறவுள்ளது. 172 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

தற்போது லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கனடா கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவி வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கான எதிர்ப்பு காரணமாக கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருந்தது.
ஆனால், அவர் பதவி விலகி மார்க் கார்னி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் ஆளும் லிபரல் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பு, அச்சுறுத்தல் இவைகளை பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
