ஜாலி!! வெதர்மேன் ஜில் பதிவு!! ஈரப்பதமான காற்று துள்ளிக் குதித்து ஓடி வரும்!!

 
வெயில்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. மே முதல்வாரத்தில் கோடை மழை பெய்ததால்  பல இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. வெயிலின் தாக்கமும் பெரிதாக பாதிக்கவில்லை. இதன் பிறகு வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. நடுவில் வந்த மோக்கா புயல் காற்றின் ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சி விட்டது . இதனால் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வெயில்
தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.  இன்றும்,  நாளையும்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயில்

இந்த அதிகபட்ச வெப்பநிலையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணி  ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மேலும் 2 நாட்களுக்கு  வெயில் கொளுத்தும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில்  தமிழ்நாடு வெதர்மேன் ஜில்லென ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார் . அதன்படி  “கடற்காற்று  நகரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளையே ஈரப்பதமான காற்று நகருக்குள் துள்ளிக்குதித்து வரத் தொடங்கும்.  இதனால், இன்று நாள் முழுக்க அனுபவித்த வெப்பத் துயரத்திலிருந்து ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கலாம். மேற்கு மாவட்டங்களில் வெப்பம் நீடிக்கும் என தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web