1206 நாட்களுக்கு பிறகு சதம்!! விளாசித் தள்ளிய விராட் கோஹ்லி!! ரசிகர்கள் உற்சாகம்!!

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்து வந்த நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா முதல் இன்னிங்சில் தற்போது விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் தேநீர் இடைவேளை வரை இந்தியா 158 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 472 ரன்களை குவித்துள்ளது. முதல் இன்னிங்சில் இன்னும் 8 ரன்களே எடுக்க வேண்டும். இதில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல் ஆரம்பத்தை வெளிப்படுத்தினார். நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன் கடைசியாக 2019 நவம்பர் 22ல் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் சதம் அடித்து அசத்தினார். 1,206 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சதத்தை பதிவு செய்துள்ளார். சர்வதேச விளையாட்டுக்களில் விராட் கோலியின் 75வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க