ஹன்ட்ரட் லீக்கில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்ப்பில்லையா? வெடித்த சர்ச்சை!
இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred தொடரில், இந்திய நிறுவனங்கள் அதிக பங்குகளை கொண்டுள்ள அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறமாட்டார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. ஐபிஎல் மாதிரி பிரபலமாகி வரும் இந்த தொடரில், Manchester Super Giants, MI London, Southern Brave, Sunrisers Leeds போன்ற அணிகள் இந்திய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 11, 12 தேதிகளில் லண்டனில் நடைபெறும் ஏலத்திற்கு 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர்.
அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் Salman Ali Agha, Shaheen Shah Afridi, Shadab Khan, Haris Rauf, Naseem Shah உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால் இந்தியா–பாகிஸ்தான் இடையேயான அரசியல் மற்றும் கிரிக்கெட் உறவு பதற்றம் காரணமாக, இந்த அணிகள் அவர்களை தேர்வு செய்ய வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009 முதல் Indian Premier League தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் இருந்து எந்தத் தடை பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 50-க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏலத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
