உஷார்!! நிறைய தண்ணீர், ஜூஸ் குடிங்க... இந்த மாவட்டங்களில் எல்லாம் 100 டிகிரியைக் கடந்தது வெயில்!

நிறைய தண்ணீர், ஜூஸ் குடிங்க. நீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளைப் பயன்படுத்துங்க. இந்த வெயில் காலத்தில் ரொம்பவே பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருங்க மக்களே. வெயில் உச்சத்தில் இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் கூடுமானவரை வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்க.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சதத்தைத் தொட்டது வெயில். அதில் மூன்று மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, கரூர், மதுரை மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சென்னை, சேலம், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் 100 டிகிரி, திருத்தணி, தர்மபுரி 99 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 98 டிகிரி வெயில் நிலவியது.
வெயில் காலங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தனியே முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்களை வெளியே அனுப்பாதீங்க. அதிகளவில் தண்ணீர் அருந்த வலியுறுத்துங்க.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!